
குளவி கொட்டு : நூறுக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்
தெனியாய – பட்டிகல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்கான பல மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது 100 பேர் வரை குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 70 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் 7 மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
