சுரங்கப் பாதையில் சிக்கி 3 வெளிநாட்டு தொழிலாளர்கள் பலி

தாய்லாந்தில் சுரங்கப் பாதை ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்தொழிலாளர்கள் சுரங்கப் பாதையில் வேலை செய்துகொண்டிருந்த போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இரண்டு சீனர்களும் மியன்மாரைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்