
இறைவரித் திணைக்கள அதிகாரிகள் போல் நடித்து பணமோசடி
அளுத்கம பகுதியில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் போல் நடித்து பணம் திருட முயன்ற இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அளுத்கம தர்கா நகரில் உள்ள கடையொன்றில் நுழைந்த தம்பதியினர், குறித்த கடையின் உரிமையாளர் வரி செலுத்தவில்லை எனவும், 10 இலட்சம் ரூபா நிலுவைத் தொகை இருப்பதாகவும் தெரித்துள்ளனர்.
பின்னர் அடையாள அட்டை மற்றும் போலி ஆவணங்களைக் காட்டி கடையில் இருந்து 10 இலட்சம் ரூபாவை பெற முயற்சித்துள்ளனர்.
இது தொடர்பில் கடையின் உரிமையாளர் தனது மகனுக்கு அறிவித்ததையடுத்து, குறித்த தம்பதியினர் மோசடியில் ஈடுபட்டவர்கள் என மகன் அடையாளம் கண்டு, கடையின் உரிமையாளர் மற்றும் அங்குள்ள மக்கள் இணைந்து குறித்த சந்தேக நபர்களை அளுத்கம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
