
மரக்குற்றி விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கைர் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகாமையில் நேற்று வியாழக்கிழமை மரக்குற்றி விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த ரசி குமார் (வயது -29) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மர ஆலை ஒன்றிற்காக கனரக வாகனத்தில் இருந்து மரக்குற்றியை இறக்கும் போதே நபர் ஒருவர் மீது குறித்த மரக்குற்றி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

