அணைக்கட்டில் மோதிய பேருந்து: எழுவர் வைத்தியசாலையில்

தங்காலை அணைக்கட்டு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தங்காலை தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்