
சுற்றுலா தொழில்துறையைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி செயலணி: சஜித்
சுற்றுலா தொழில்துறையைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடல் வளங்களையும், வன வளங்களையும் மையமாகக் கொண்டு சுற்றுலாத்துறை கட்டியெழுப்பப்படும். கல்வித்துறையை மேம்படுத்த சகல வசதிகளையும் கொண்ட பாடசாலை கட்டமைப்பை ஏற்படுத்தி, நவீன தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு இலவசக்கல்வியை அனைத்து பாடசாலைகளுக்கும் விரிவுபடுத்துவோம்.
இந்த நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முடியுமான வளங்களைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் உண்டு. நேரடியான வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்று தொழில்துறையை உருவாக்குவதோடு இலஞ்ச ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து அரச கொடுக்கல் வாங்கல்களையும் டிஜிட்டல் மயப்படுத்தி வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
