இந்தியா-குஜராத்தில் வெள்ளப்பெருக்கு : 28 பேர் உயிரிழப்பு

இந்தியா-குஜராத்தில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடும் மழைக் காரணமாக 30,000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழைக் காரணமாகப் பல கங்கைகள் மற்றும் நீர்நிலைகள் பெருக்கெடுக்கும் நிலையை எட்டியுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்