
ஹிருணிகா ரணிலுடன் செல்ல மாட்டார் : நம்பிக்கை வெளியிட்ட உமா!
-யாழ் நிருபர்-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பக்கமே நிக்கிறார், ரணில் பக்கம் செல்ல வாய்ப்புக்கள் இல்லை, என ஐக்கிய மக்கள் சக்தி வடமாகாண பிரதம அமைப்பாளர் உமாச்சந்திரப் பிரகாஷ் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் ஹிருணிகா ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக பேசப்படுகிறதே என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஹிருணிகா ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுடன் பயணித்து வருகிறார்.
அவர் துணிச்சல்மிக்க பெண், நானும் பல்வேறு போராட்டங்களில் அவருடன் இணைந்து பயணித்து இருக்கிறேன், எமது போராட்ட வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.
ஆகவே, ஹிருணிகா ரணில் பக்கம் செல்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ள நிலையில் தொடர்ந்தும் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
