
ஷன்ஷான் சூறாவளி : ஜப்பானில் தொடரும் அவசரகால நிலை!
ஜப்பானில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் அவசர கால நிலையும் தொடர்கிறது.
ஜப்பானின் தென்மேற்குப் பகுதியை ஷன்ஷான் சூறாவளி தாக்கியுள்ளது.
மணித்தியாலத்திற்கு 252 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியதுடன், பலத்த மழையுடன், பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகளும் பதிவாகியுள்ளதாக ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதுடன் 250,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, எதிர்வரும் நாட்களில் தலைநகர் டோக்கியோ உட்பட ஜப்பானின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளை ஊடறுத்து ஷன்ஷான் சூறாவளி செல்லும் என அந்தநாட்டு வானிலை ஆய்வு நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது.
இந்தநிலையில் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடிய மக்களைக் குறித்த பகுதிகளிலிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
