
நிந்தவூரில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி!
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமைவட்டை பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார்.
நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
வயலில் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் யானை தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நிந்தவூர் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை யானை தாக்குதலுக்கு இலக்காகி 55 வயதுடைய ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
