
மட்டக்களப்பில் தபால் மூல வாக்காளர் வாக்குச்சீட்டு விநியோகம்!
-மட்டக்களப்பு நிருபர்-
அரச திணைக்களங்கள் ஊடாக தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கான வாக்காளர் வாக்குச் சீட்டு விநியோகம் நேற்று புதன்கிழமை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், வாக்களிப்பதற்காக அரச திணைக்களங்கள் ஊடாக தபால் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கான வாக்காளர் வாக்கு சீட்டு விநியோக நடவடிக்கை மட்டக்களப்பு பிரதான அஞ்சல் அலுவலகத்தில் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டது
அந்த வகையில், நேற்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களுக்கு வாக்காளர்களுக்கான வாக்கு சீட்டுக்கள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

