
வீடொன்றில் நடத்தப்பட்ட மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை
கடவத்தை பகுதியில், வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் என்ற போர்வையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
