
மனைவி உயிரிழந்த விரக்தியில் கணவனும் தவறான முடிவு
-யாழ் நிருபர்-
யாழில் மனைவி உயிரிழந்த விரத்தியால் கணவனும் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.
புது வீட்டுத்திட்டம், நாவற்குழி, கைதடி பகுதியை சேர்ந்த மனுவல் சூசைமுத்து (வயது – 72) என்பவரே இவ்வாறு தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனைவியை பிரிந்த துயரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
