
புகைத்தல் மற்றும் மதுபான பாவனை: அதிகரிக்கும் உயிரிழப்புகள்
புகைத்தல் மற்றும் மதுபான பாவனையினால் நாளாந்தம் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் (ADIC) குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் நாளாந்தம் 10 இல் 8 பேர் தொற்றா நோய்களினால் உயிரிழப்பதாகவும் புகைப்பிடித்தல் மற்றும் மதுபான பாவனையே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் நாட்டில் புகைத்தல் மற்றும் மதுபான பாவனைக்காக நாளொன்றில் 121 கோடி ரூபாய் செலவிடப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
இதேவேளை கடந்த 2022 ஆம் ஆண்டில் மது பாவனையினால் ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதார இழப்புகள் 237 பில்லியன் ரூபாய் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
