A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது, கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்தி பயணித்துள்ளது.

அதே திசையில் பயணித்த பார ஊர்தி குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பார ஊர்தியின் சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார், விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்