சூடானில் அணைக்கட்டு உடைப்பு: அறுபதிற்கும் மேற்பட்டோர் பலி

கிழக்கு சூடானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கட்டு ஒன்று உடைந்துள்ளது.

அணைக்கட்டிலிருந்து வெளியேறிய நீரில் அடித்துச்செல்லப்பட்டு சுமார் 60ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த சம்பவத்தில் பலர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்