
டயனாவிற்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு
போலி ஆவணமொன்றை சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட வழக்கு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கையை கையளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன முன்னிலையில் குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பிரதிவாதி டயனா கமகேவின் கைரேகைகளை எடுத்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
