வளர்ப்பு நாய் கடிக்கு இலக்கான குடும்பப் பெண் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

யாழில் குடும்பப் பெண்ணொருவர் வளர்ப்பு நாய் கடிக்கு உள்ளாகிய நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

காரைக்காட்டு வீதி, வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த மகேந்திரம் சாந்தி (வயது – 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு கடந்த மாதம் 24ஆம் திகதி வளர்ப்பு நாய் கையில் கடித்துள்ளது. இந்நிலையில் அவர் இந்த மாதம் 13ஆம் திகதி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பக்றீரியா தொற்று ஏற்பட்டதன் காரணமாக, தோல் வியாதி ஏற்பட்டு நேற்று அதிகாலை காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்