பிஜிலி ரமேஷ் காலமானார்

யூடியூப் சேனல் மூலமாக பிரபலமாகி அதை தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த பிஜிலி ரமேஷ் உடல் நலக் குறைவு காரணமாக இன்று செவ்வாய் கிழமை காலமானார்.

பொன்மகள் வந்தாள், நட்பே துணை, ஆடை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென இடத்தை தக்கவைத்த இவருக்கு மதுப்பழக்கம் காரணமாக உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இவரது இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்