
மட்டு.கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு
-மட்டக்களப்பு நிருபர்-
சக்தி கிறவுண் நிகழ்ச்சியில் 3 ஆம் இடத்தினைப் பிடித்து சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை தேடித் தந்த பிரதீபன் சிற்சபேசன் மற்றும் மாகாண மட்டத்தில் பாடசாலைக்கு கல்வி, கலாசார விடயங்களில் பெருமை சேர்த்த சிவாநந்தியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு சிவானந்தா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்தியர் கங்காதரன் கலந்து கொண்டதுடன் பழைய மாணவர் சங்க தலைவரும்,மண்முனை வடக்குப் பிரதேச செயலாளருமான வ. வாசுதேவன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளரும் இறைவரித் திணைக்களப் பிரதி ஆணையாளருமான த. குணராஜா,வித்தியாலய பழைய மாணவியும், தென் எருவில் பற்றுப் பிரதேச செயலாளருமான திருமதி சிவப்ரியா வில்வரெட்ணம், பாடசாலை பழைய மாணவரும் மட்டக்களப்புக் கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான என். ஹரிஹரராஜ், பிரதி அதிபர்கள், முன்னாள் முதலைகுடா மகாவித்தியாலய அதிபர் எஸ்.அகிலேஸ்வரன் ஆகியோருடன் விளையாட்டு இணைப்புச் செயலாளர், சர்வதேச இணைப்பு செயலாளர், மாணவர் சங்க செயலாளர் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

