ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு திருமலையில் கஜேந்திர குமார் தலைமையில் துண்டுப் பிரசுரம் – வீடியோ இணைப்பு

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி திருகோணமலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் துண்டுப்பிரசுரங்களை பொது மக்கள் மத்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்துள்ளனர்.

திருகோணமலை பெரியகடை வீதியில் ஆரம்பித்து சிவன் கோயிலுக்கு முன்னால் வரையான வீதி வரை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் மாவட்ட செயலாளர் உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு மக்களுக்கு வீதி வழியாக துண்டுப்பிரசுரங்களை வழங்கி வைத்தார்கள்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட குறித்த கட்சியின் மாவட்ட செயலாளர் சிறீபிரசாந் தமிழ் மக்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.

பொது வேட்பாளர் என்பது வெறும் கண்துடைப்பு இரண்டாம் விருப்பு வாக்கை பெரும்பான்மை இன வேட்பாளருக்கு கொண்டு செல்லும் தந்திரோபாயம். ஒற்றை ஆட்சி முறை இல்லாமல் ஆக்கப்பட்டு சமஷ்டி ஆட்சியை கொண்டு வரும் வரை தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும். 13ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்தோரே பொது வேட்பாளருக்கு பின்னால் நிற்கின்றனர் எனத் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்