
வடகிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளால் தான் இம்முறை ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்: சிறிதுங்க ஜயசூரிய
-மட்டக்களப்பு நிருபர்-
வடகிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளால் தான் இம்முறை ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
மட்டு ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிபௌபிட்டார்.
அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்ததாவது,
தற்போது இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட்டுள்ளதாக நீதிமன்றம் அண்மையில் தெரிவித்துள்ளது, இப்படியானவர்களையா நாம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கவுள்ளோம்.
பிரதான வேட்பாளர்கள் ஒரு வாக்காளாருக்கு 300 ரூபாய்க்கு மேல் செலவளிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிடம் அனுமதி கோருகின்றனர். அப்படியினால் இவர்களுக்கு மில்லியன் கணக்கில் பணம் எங்கிருந்து வந்தது. மக்கள் மீது உள்ள அக்கறையிலா இவர்கள் இந்தப் பணத்தை செலவளிக்க ஆர்வமாக இருக்கின்றனர்.
நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற ரணிலின் கூட்டத்தில்
1000 ரூபாய் காசும் பிரியாணி சாப்பாடும், களவாக கால் போத்தல் சாராயமும் வழங்கியுள்ளனர்.
அநுரகுமாரவும் அப்படித்தான் இவர்கள் எல்லாம் மக்களுக்காக பாடுபடுபவர்கள் அல்ல என்பதை மக்கள் நன்கு உணர்வார்கள்.
தற்போது ரணிலின் கூட்டங்களில் நிற்பவர்கள் பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்களும், அலிசப்றி ரகீம் போன்ற தங்கம் கடத்தியவர்களே நிற்கின்றார்.
தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஜேவிபி கட்சியினர் எவ்வாறு தமிழர்கள் மத்தியில் வாக்கு கேட்டு வருவது. சிந்தித்துப் பாருங்கள்.
தற்போது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக செயற்படும் ஒரு கட்சி எமது ஐக்கிய சோசலிச சட்சி மாத்திரமே. தமிழ் மக்கள் கோரும் நியாயமான கோரிக்கையைத் தீர்க்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
ரணில் எதிர்வரும் தை மாதம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக கூறுகின்றார், அப்படியானால் அவரால் ஏன் அதை இப்போது செய்ய முடியவில்லை, அதை நாம் ஏமாற்று வித்தையாகவே பார்க்க வேண்டும்.
ஜே.வி.பி.யினர் தற்போது ஒவ்வொரு 3 கிலோ மீற்றருக்கும் ஒரு தேசிய பாடசாலை அமைக்கவுள்ளதாகக் கூறுகின்றனர். இதெல்லாம் எந்தளவிற்கு சாத்தியம், அப்படியானால் அனைவரும் எமது மக்களை ஏமாற்றவே பார்க்கின்றனர்.
பாரம்பரிய தமிழ் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்துத்து, தமது நலனுக்காகவே ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கின்றனரே ஒளிய தமிழ் மக்களின் நலனுக்காக அல்ல என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
