
வவுனியாவில் பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு நாள்
-வவுனியா நிருபர்-
வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று ஞாயிற்று கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.
குறித்த நினைவு தினம் வவுனியா நகரசபை மற்றும் பண்டாரவன்னியன் விழாக்குழுவின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன் தலைமையில் நடைபெற்றது.
காலை 9 மணியளவில் வவுனியா மாவட்டசெயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு முன்பாக விருந்தினர்கள் வரவேற்புடன் கொடியேற்றல் இடம்பெற்றுடன் , பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் P.A . சரத்சந்திர, சிறப்பு விருந்தினர்களாக வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக மாவட்ட திணைக்களத் தலைவர்கள், மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் விருந்தினர்களாக பொதுமக்கள் , பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
