நாமல் ராஜபக்ஸ நேற்று முளைத்த காளான்: செல்வராஜா கஜேந்திரன்

-அம்பாறை நிருபர்-

நேற்று முளைத்த காளானாக இருக்கின்ற இந்த நாமல் ராஜபக்ஸவிற்கு சமீப காலமாக பல கருத்துக்களை குறிப்பிடும் துணிச்சலை கொடுத்தது சுமந்திரன் சம்பந்தன், அரியநேந்திரன், சிறிதரன், உட்பட இந்த தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு 2010 ஆண்டு 2015 , 2020 ஆண்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுப் பேரும் பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நேற்று சனிக்கிழமை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு தெளிவூட்டும் துண்டு பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டவேளை ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்