
கட்டுப்பாட்டை இழந்து மினி லொறி விபத்து
இந்தியாவில் உதகை அருகே புதுமந்து காவல்நிலையம் அருகே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி லொறிக்குள் சிக்கிய தம்பதியை தீயணைப்புத் துறையினர் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.
அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்-நிர்மலா தம்பதி தங்களது நிலத்தில் விளைந்த மலைப் பூண்டுகளை மேட்டுப்பாளையத்தில் உள்ள காய்கறி சந்தையில்; விற்றுவிட்டு இன்று சனிக்கிழமை அதிகாலை திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
மினி லொறியை ஓட்டி வந்த செல்வராஜ் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
