
அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து : சாரதி பலி!
அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று இங்கினியாகலை பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட தேவாலஹிந்த பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் பஸ் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியது.
பின்னர், பயணிகள் உடனடியாக சாரதியை இங்கினியாகல வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும் சாரதி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை டிப்போவிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணியளவில் பயணித்த பஸ்ஸின் சாரதியே இவ்வாறு உயிரிழந்தார்.
விபத்தின்போது பஸ்ஸில் சுமார் 40 பயணிகள் இருந்த போதிலும், ஒரு பயணி மட்டும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
உயிரிழந்த பஸ் சாரதி பரகஹகலே பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான (வயது 49) மஞ்சுள பிரசன்ன ஆவா
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
