
பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு
பங்களாதேஷில் கடந்த இரு மாதங்களாக நடைபெற்ற கலவரங்களில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்தக் கலவரத்தின்போது ரபிகுல் இஸ்லாம் என்பவரின் மகன் ஓகஸ்ட் 5ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு அடாபூர் பொலிஸ் நிலையத்தில் நடந்து வருகிறது.
இந்தக் கொலை வழக்கில் சுமார் 150க்கும் மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.
முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவர் நஜ்முல் ஹுசைன் எனப் பல முக்கிய நபர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
கலவரத்துக்கு முன்பு வரை பங்களாதேஷை ஆண்ட அவாமி லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் ஷகிப் அல் ஹசன்.
தற்போது 37 வயதாகும் ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் மூத்த வீரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
