
செவிப்புலனற்ற மாணவர்களுக்கு தேசிய தரத்தில் என்.வி.கியூ.4 தர சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
-மட்டக்களப்பு நிருபர்-
செவிப்புலனற்ற மாணவர்களுக்கு தேசிய தரத்தில் என்.வி.கியூ. 4 தரச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
மட்டக்களப்பு வை. எம். சி. ஏ நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட கணினி வரைபியல் தொழில்நுட்ப பயிற்சி நெறியை நிறைவு செய்த செவிப்புலனற்ற மாணவர்களுக்கு தேசிய ரீதியில் முதல் முறையாக தேசிய தரத்தில் என்.வி.கியூ 4 தரச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வை எம் சி ஏ (YMCA) நிறுவனத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு வை எம் சி ஏ வாழ்வோசைப் பாடசாலை அதிபர் சி. ஏ .தயாமதி ஒருங்கிணைப்பில் நிறுவனத் தலைவர் ஏ. ஆர். எஸ்.தவராஜா தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்.ஹரிஹரராஜ், வலயக் கல்வி அலுவலக விசேட கல்விக்கான ஆசிரிய ஆலோசகர் எஸ். சிவகுமார், சமூக சேவைத் திணைக்கள தொழில் பயிற்சி நிலைய அலுவலகப் பொறுப்பதிகாரி ஜீவிதன் சுகந்தினி, வை. எம். சி. ஏ நிறுவன உறுப்பினர்கள், ஊழியர்கள்,வாழ்வோசைப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
