தேர்தலில் ஆதரவளித்தால் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பேன்: டக்ளஸ்

-களுவாஞ்சிகுடி நிருபர்-

மக்கள் எனது கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் பெரும் ஆதரவு தருமிடத்து தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளை நிச்சயமாக பெற்றுக்கொடுப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசேட கள விஜயத்தை மேற்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

இவர் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர், களுதாவளை ஆரம்ப சுகாதார மருத்துவ பிரிவு வைத்தியசாலைக்கு வருகை தந்த அமைச்சர் வைத்தியசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து களுதாவளையில் மூடப்பட்ட நிலையில் காணப்படும் விசேட பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டதுடன் இதனை வெகு விரைவில் ஆரம்பிப்பதற்குரிய வேலைகளை முன்மொழிவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்