மட்டக்களப்பு மண்டூர் பிரதான வீதியை குறுக்கெடுத்து செல்லும் 35 யானைகள்

-களுவாஞ்சிகுடி நிருபர்-

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு மண்டூர் பிரதான வீதியை குறுக்கெடுத்து 35 யானைகள் இன்று வெள்ளிக்கிழமை சென்றன.

கடந்த வாரம் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் பல்வேறு அச்சுறுத்தலாக அமைந்த காட்டு யானைகள் இன்று வெல்லாவெளி, மண்டூர் வயல்பகுதிகளில் சஞ்சரித்தன

இதனை அவதானித்த பிரதேச வாசிகள், வெல்லாவெளி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெல்லாவெளி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், சுமார் 2.00 மணித்தியால பிரயேத்தனத்திற்கு பிறகு , காட்டு யானைகளின் கூட்டத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பினர்.

இதனால் மட்டக்களப்பு மண்டூர் பிரதான வீதியின் போக்குவரத்துக்கு 1/2 மணி நேரம் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்