கட்டிட வேலையில் ஈடுபட்ட தொழிலாளர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் கட்டிடவேலையில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையைச் சேர்ந்த 34வயதுடைய சின்னான்டி பரமேஸ்வரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

மேல் மாடி கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் நேற்று இரவு இருவர் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் ஒருவர் நித்திரைக்கு சென்றிருந்தார்.

இந் நிலையில் உயிர் இழந்த நபர் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், நித்திரைக்கு சென்ற நபர் அதிகாலை எழுந்து வேலை செய்து கொண்டிருந்தவரை தேடியபோது சடலமாக கீழே காணப்பட்டார் என பொலிசாருக்கு தெரிவித்திருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்