மக்கள் போராட்ட முன்னணியினர் வவுனியாவில் தேர்தல் பிரசாரம்

-வவுனியா நிருபர்-

மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான ருவன் போபகேவை ஆதரித்து வவுனியா நகரில் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் செயற்பாடு இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா இலுப்பையடிப்பகுதியில் ஆரம்பமான குறித்த பிரச்சார நடவடிக்கை வவுனியா நகரப்பகுதி எங்கும் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பிரச்சாரநடவடிக்கையில் மக்கள்போராட்ட அமைப்பினர் மற்றும் புதிய ஜனநாயக மார்க்சிஸ லெனினிச கட்சியினர், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்