மருவி வரும் இசை மற்றும் கலை துறையை மீட்டெடுக்கும் நிகழ்வு

பூமியில் சொர்க்கம் மலர்ந்தது (heaven blossomed on earth) நிகழ்வானது இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை மண்டபத்தில் சுவாமிவிபுலானந்தா அழகியல் ஆய்வுக் கழகம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக இயக்குனர் பாரதி கெனெடி தலைமையில் இடம்பெற்றது.

எமது மண்ணில் மருவி வரும் இசை மற்றும் கலை துறையை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக பொறியியலாளர் புலஸ்தி கேரத், கௌரவ அதிதியாக ஸ்ருதி லயா மியூசிக் அக்கடமியின் நிறைவேற்று பணிப்பாளர் மாலதி சிவ சீலன், துறை தலைவர்கள், விரிவுரையாளர்கள், போதனா ஆசிரியர்கள், மாணவர்கள்என பலரும் கலந்துகொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்