
சாலை விபத்து: ஆயுதப்படை பெண் காவலர் பலி
இந்தியாவில் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஆயுதப்படை பெண் காவலர் உயிரிழந்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சுபப்பிரியா என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் ரெட்டவயல் அருகே உள்ள கோயில் திருவிழா பாதுகாப்புப் பணி முடிந்து சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதால் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
