ஹப்புத்தளையில் வீதியை விட்டு விலகி லொறி விபத்து

-பதுளை நிருபர்-

ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுளை கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளைக்கும் பெரகலைக்கும் இடைப்பட்ட வியாரகல பகுதியில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹப்புத்தளை பகுதியில் நிலவும் அதிகளவிலான பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்

ஹாலிஎல பகுதியில் இருந்து மீரிகம செல்லும் போதே குறித்த லொறி விபத்துக்குள்ளான தாகவும் லொறியில் சாரதி மாத்திரமே பயணித்ததாகவும் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்