
பங்களாதேஷ் வெள்ளப்பெருக்கு : 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!
பங்களாதேஷில் பெய்து வரும் கன மழை காரணமாக 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷின் 6 மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கினால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
அந்த மாவட்டங்களைச் சேர்ந்த 64,000க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், அந்த பகுதிகளில் உள்ள 11 கங்கைகள் பெருக்கெடுக்கும் நிலையை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
