வாகன விபத்து: இளைஞர் உயிரிழப்பு

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம், குன்னத்தூரில் இயங்கி வரும் ஸ்ரீ பாரதி வித்யாஸ்ரம் பள்ளி பேருந்து சாரதிகள் இடையே யார் முதலில் செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுஇ சேசிங் செய்த போது நேரிட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.

இரும்பேட்டையைச் சேர்ந்த யோகேஷ் ( வயது 21 ) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர்மோட்டார் சைக்கிளில் கண்ணமங்கலம் நோக்கி சென்ற எதிரே வந்த பேருந்து மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தை சாலையின் நடுவழியில் நிறுத்தி விட்டு சாரதி தப்பி ஓடி விட்ட நிலையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்