
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு அத்தாட்சிபடுத்தும் அலுவலர்களுக்கான கலந்துரையாடல்
-மட்டக்களப்பு நிருபர்-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் 2024 இற்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு அத்தாட்சிபடுத்தும் அலுவலர்களுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சியலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் தபால்மூல வாக்களிப்பு அத்தாட்சிபடுத்தும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடயதானங்கள் தொடர்பாக இதன் போது விரிவாகத் தெளிவூட்டப்பட்டது.
இந் நிகழ்வில் உதவித் தேர்தல்கள் ஆணையளர் எம்.பி.எம். சுபியான், திணைக்களத் தலைவர்கள், அரச உயர் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
