யாழில் பாடசாலை மீது முறிந்து விழுந்த மலைவேம்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள சைவத்தமிழ் வித்தியாலயத்தின் வகுப்பறை மீது மலைவேம்பு ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதனால் பாடசாலையின் கூரை பகுதியில் சேதமடைந்திருப்பதாகவும், மரத்தை வெட்டி அகற்றுவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும், அவர் கூறினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்