பாம்பை கடித்தே கொன்ற ஒரு வயது குழந்தை

இந்தியாவில் பிகாரில் ஒரு வயது குழந்தை கடித்து, பாம்பு இறந்து போனது கிராம மக்களை வியப்படையச் செய்தது.

பிகாரின் கயா மாவட்டத்தில் ஃபதேபூர் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் குமார் என்பவரின் ஒரு வயது மகன் ரியான்ஷ் குமார் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று வீட்டு வாசலில் உலா வந்தது. பாம்பை கையில் பிடித்த குழந்தை, விளையாட்டு பொம்மை போல வாயில் கடித்தது. இதில் அந்த குட்டிப் பாம்பு இறந்தே போனது.

பாம்பை வாயில் கடித்த சிறுவனை கண்ட குடும்பத்தினர். பதறியடித்துக் கொண்டு மருத்துவமனையில் சென்று பரிசோதித்தபோது சிறுவனுக்கு ஏதும் ஏறவில்லை என்பது தெரியவந்தது. சிறுவன் கடித்து விளையாடிய பாம்பு விஷமற்றது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாம்பை கடித்துத் துப்பிய சிறுவனின் இந்த விளையாட்டு சம்பவம் கயாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்