தனியாக வசித்து வந்த பாட்டி கொலை: பேரன் உட்பட 3 பேர் கைது

இந்தியாவில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அதிக பணம் சேமித்து தனித்து வசித்து வரும் பாட்டி, செலவிற்கு பணம் தராததால் ஆத்திரத்தில் பங்காளி உறவுமுறை பேரன் கொலை செய்தது பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 3ம் திகதி விவசாய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது பாட்டி காணாமல் போனதாக, தாரமங்கலத்தில் வசித்து வரும் மகள் வழி பேரன் புகார் அளித்து இருந்தார்.

இதுகுறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், பங்காளி உறவுமுறை பேரன்சித்துராஜ், தனது நண்பர்கள் உடன் இணைந்து பாட்டியை கொலை செய்து காவிரி ஆற்றில் வீசியதாக வாக்குமூலம் அளித்ததையடுத்து மூவரையும் கைது செய்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்