
லொறி கவிழ்ந்து விபத்து: மூவர் பலத்த காயம்
-பதுளை நிருபர்-
பதுளை தென்னேபங்குவ பிரதான வீதியில் வெந்தேசி வத்தை பகுதியில் லொறி ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தகெட்டிய 21 ஆம் கட்டையை சேர்ந்த லொறியில் பயணித்த மூவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
குறித்த லொறியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கான காரணம் என பதுளை தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்தனர்.
காயமடைந்த மூவரும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகளை பதுளை தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
