மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேஷனின் மாபெரும் 8ஆவது இரத்ததான முகாம்

மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேஷனின் 8 ஆவது இரத்ததான முகாம் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் ஏ. எல் எம் . ஹமீத்
தலைமையில் நடைபெற்ற இரத்ததான ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேஷன் அமைப்பின் உறுப்பினர்கள், ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகிகள், மட்டக்களப்பு நகர் வர்த்தகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் காத்தான்குடி பிரதேச வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவுடன் இணைந்து இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த இரத்ததான நிகழ்வில் காத்தான்குடி பிரதேச வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு
வைத்தியர் அலிமா, இரத்த வங்கிப் பிரிவு பொதுசுகாதாரப் பரிசோதகர் பி. எம் .எம் .பைசல் ,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் காத்தான்குடி பிரதேச வைத்திய சாலை தாதிய உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்