
புத்தளத்தில் இருவேறு பகுதிகளில் இரு யானைகள் உயிரிழப்பு
புத்தளத்தில் இரு வெவ்வேறு பகுதிகளில் இரு யானைகள் உயிரிழந்துள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் எரந்த கமகே இன்று புதன் கிழமை தெரிவித்தார்.
அதன்படி, புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தில் 30 வயதுடைய யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, புத்தளம், வண்ணாத்தவில்லு பிரதேசத்தில் வீடொன்றிற்கு பின்புறத்தில் உள்ள காணியொன்றில் மின்சாரம் தாக்கி 30 வயதுடைய யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த காணியின் உரிமையாளர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக தனது காணியில் மின்சாரத்தை பொருத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னரும் யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்த காணியின் உரிமையாளருக்கு எதிராக ஆனமடுவ நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
