சாவகச்சேரியில் சட்டவிரோதமாக மணல் கடத்திய ஐவர் கைது

-யாழ் நிருபர்-

யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் ஐவரை கைது செய்துள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன அவர்களின் தலைமையில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை மூன்று டிப்பர் வாகனங்களும் நேற்றுமுந்தினம் இரண்டு டிப்பர் வாகனங்களும் கைப்பற்றப்பட்ட நிலையில் ஐந்து சந்தேக நபர்களும் கைதாகியுள்ளனர்.

அண்மைய நாட்களாக தென்மராட்சி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற பல டிப்பர் வாகனங்கள் மாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்