
வாகன விபத்து: ஒருவர் காயம்
திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியில் இன்று புதன் கிழமை காலை லொறி – பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சிறிய லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த தனியார் பேருந்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியின் சாரதி உறங்கியதால் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது, லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
