
தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம்
-கிண்ணியா நிருபர்-
தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஒன்று இன்று புதன் கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த மருத்துவ முகாமானது தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
இரத்தப் பரிசோதனை, பற் சிகிச்சை,நீரிழிவு நோய் உள்ளிட்ட பல மருத்துவ சேவைகள் இதன் போது இடம் பெற்றதுடன் இன்றைய தினமே இரத்த பரிசோதனைக்கான அறிக்கைகளும் வழங்கப்பட்டு தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஆர்.மலர்விழி அவர்களால் அறிக்கையின் பிரகாரம் வைத்திய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் ஊடாக நடமாடும் பஸ் மூலமான இரத்த பரிசோதனை ,பற்சிகிச்சை போன்றனவும் தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
