
கடற்கரை பகுதியில் ஆணின் சடலம் மீட்பு
புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் நேற்று செவ்வாய்க் கிழமை மீட்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும் 05 அடி 08 அங்குலம் உயரமுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவரது இடது மார்பகத்தில் “அம்மா” எனவும் வலது மார்பகத்தில் “வினித்தி” எனவும் பச்சை குத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சிலாபம் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
