நாமலின் முதலாவது கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் அனுராதபுரத்தில் இன்று புதன் கிழமை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்யும் நோக்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரம் கடபனஹா பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முதலாவது பிரச்சார கூட்டத்தை அநுராதபுரத்திற்கு கொண்டு சென்றமை ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்