
14 வயது சிறுமி கர்ப்பம் : கோயில் பூசாரிக்கு 40 ஆண்டுகள் சிறை!
இந்தியா – திருப்பூரில் 14 வயது சிறுமியைத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய கோயில் பூசாரிக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 57) என்ற கோயில் பூசாரியான இவர், கடந்த 2021ஆம் ஆண்டு கோயிலுக்கு வந்த 14 வயது சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தைப் பயன்படுத்தி அந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதில் அந்த சிறுமி கர்ப்பமானார், இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பூசாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இதையடுத்து சிறுமியை ஏமாற்றித் தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்திற்காக 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

